அர்த்தம் தெரியல

நான்  பணி  நிமித்தமாக  இப்ப  மராட்டிய  மாநிலம்  புனேயில்   இருக்கேன்.
சில  மாதங்களுக்கு  முன் நடந்த  20/20 உலககோப்பை  நடந்தப்ப  ரொம்ப  வேதனையான  விடயம்  ஒன்னு  என்  அலுவலகத்துல  நடந்தது .

முதல்ல  விசயத்த  சொல்றேன்  அப்பறம்  வேதனையனதா இல்லையான்னு  உங்களுக்கே  தெரிய  வரும் .

என்  ப்ரொஜெக்டில்  நான் மட்டும் தான் தமிழ்,என் கூட கதை பேசுறதுக்கு ஒரு ஆள் இல்லையேன்னு  எனக்கு  ரொம்ப  கவலையா இருக்கும்.
நான் எப்பயும் என் புனே நண்பர்கள்ட தமிழ்  தமிழ்நாடு அப்டின்னு கொஞ்சம் அதிகமாவே பேசிக்கிட்டு இருப்பேன்.20/20 மேட்ச்  நடந்தப்ப  தமிழ்நாட்ல  இருந்து கொஞ்ச பேர் இங்க பயிற்சிக்காக  வந்துருந்தாங்க .
நான்  என்  நண்பர்களோட டீ சாப்டுகிட்டு இருந்தப்ப அவங்க எல்லாம் என் பக்கத்து டேபிள்ல  உக்கார்ந்து இருந்தாங்க.

நான்  என்  நண்பர்களிடம், இந்த  தமிழ்  பசங்கள  பார்த்ததே  சந்தோசமா இருக்கு அப்டின்னு  சொன்னேன்.மேட்ச்  ஆரம்பிக்கும் முன்ன "தேசியகீதம்" அங்க இருந்த tv ல ஒளிபரப்பானது...அந்த உணவுவிடுதில எப்டியும் ஒரு 300 பேரு இருந்துருப்போம்.
"தேசியகீதம்" பாட ஆரம்பிச்சதும் 294 பேரும் எழுந்து நின்னு பாட ஆரம்பிச்சோம்
அந்த மீதம் ஆறு பேரு யாருன்னா ....5 தமிழ் பசங்களும் ஒரு மாற்றுத்திறனாளியுந்தான் .அதுவும் அந்த மாற்றுத்திறனாளி அமைதியா இருக்க அந்த  5 தமிழ் பசங்களும் பேசிக்கிட்டு  இருந்தாங்க ....

பாடல் முடிஞ்சதும் நான்  வெட்கத்துல தல  குனிஞ்சு அங்க  இருந்து  கிளம்பி வந்துட்டேன்.

அவங்களுக்கு "தேசியகீதம்" பாடும்  போது எழுந்து நின்னு மரியாதை குடுக்கனுனு ஏன்  தோணலை என்ற கேள்வி எனக்குள்ள இருந்துட்டே இருந்தது.

ஒன்னு அவங்க இயல்பே அப்டி இருக்கலாம்
இல்ல  அந்த  பாடலோட பொருள் விளங்காமலே இத்தனை நாளும் பாடுனதுனால அந்த 
"தேசியகீத" பாடல் உண்டாக்கும் உணர்வு  அவங்களுக்கு  இயல்பாவே  வரல"

சரி தேசியகீதத்தோட பொருள் என்னனு எனக்கு தெரியுமா ? அப்டின்னா ,இல்ல எனக்கும்  தெரியாது.எல்லோருக்கும் தேசியகீதத்தோட பொருள் தெரிஞ்சுருக்கனும்றது  அவசியம்.

நான் தேடி கண்டுபிடிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.....அதையே இங்க பகிர்ந்துக்கறேன்............

இந்த  இணைப்பில் சொடுக்கவும்..தேசியகீதம்"

இந்த ஊரிலெல்லாம்  தேசியகீதத்த  மக்கள்  அதிகமா கூடுற இடமான திரையரங்குகள்ள ஒவ்வொரு காட்சிக்கும் முன்ன ஒளிபரப்புறாங்க.
(இதே  போல தேசிய கீதத்த நம்ம பசங்க அவமதிச்ச நிகழ்வு "விண்ணை தாண்டி வருவாயா" படம் பார்க்கும் போதும் நடந்தது)

நம்ம ஊருல கல்லூரி விழாக்கள் தேசியகீதம் பாடுறதே குறைஞ்சு போயிடுச்சு.........

ம்ம்..ம்.ம்..ம். என்ன  பண்றது ?

அது கூட பரவாயில்லை , என்  நண்பர் ஒருத்தரிடம் இந்த விசயத்த சொல்லி வருத்தப்பட்டப்ப அவர் எதார்த்தமா "தேசியகீதத்த விடுடா, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு ?" அப்டின்னு கேக்க எனக்கு உசிரே போயிடுச்சு....

அப்புறம் என்ன பண்றது,அதையும் தேடி கண்டுபிடிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்........அதையே இங்க பகிர்ந்துக்கறேன்.
இந்த இணைப்பில் சொடுக்கவும்....................தமிழ்த்தாய் வாழ்த்து::

தேசியகீதமும் தெரியல,தமிழ்த்தாய் வாழ்த்தும் தெரியல...............
 ( இப்டி நான் பொலம்பிகிட்டே பதிவு செஞ்சுகிட்டு இருக்கேன், பக்கத்துல என் நண்பன் "வக்கா வக்கா" பாட்ட ரொம்ப தெளிவா பாடிகிட்டு இருக்கான்.................)

2 comments:

ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே பாடல் நம் "தமிழ் தாய் வாழ்த்து"... அதை இங்கு பிரசுரித்ததிற்கு மிக்க நன்றி தோழரே....
அதே நேரம், நம் தேசிய கீதத்தில் நான் கேட்டறிந்த ஒரு விடயம். "ரபிந்த்ரநாத் தாகூர் அவர்கள் இங்கிலாந்து இளவரசியை கௌரவ படுத்தும் வகையில் படடியது" என்று.....
Please click the link :
http://en.wikipedia.org/wiki/Jana_Gana_Mana_(the_complete_song)

இது உண்மையானால் நாம் தேசிய கீதம் பாடுவதில் அர்த்தமில்லை என்றே தோன்றுகிறது... இது என்னுடைய கருத்து மட்டுமே. கேரளாவில் ஒரு பள்ளியில் தேசிய கீதம் பாட பிள்ளைகள் மறுத்துவிட்டனர் என்ற செய்தியையும் தெரிவிக்கிறேன்...
 
I am Also sometimes feel like that.....!! ut Maharastra people are well known for their patriotism.