வைகை மண் -பகுதி 1

காஞ்சியில் இருந்து புறப்பட்டு இன்றோடு நான்கு நாள் ஆகிவிட்டது.மூன்று நாள் நடை, ஒரு நாள் குதிரைப்பயணம், என்று இந்த முறை பயணம் மிக நீண்டதாக அமைந்தது .எனினும் காஞ்சி மாநகரில் நான் சந்தித்த சமண முனிவர் மதுரையின் சிறப்பை என்னிடம் விவரித்த பொது உண்டான ஆர்வம என்னில் இன்னும் குறையவே இல்லை.”

அவர் விவரித்த அளவுக்கு அழகான நகர் ஒன்று உலகில் இருக்கும் என்பதை இந்த நொடி வரை என்னால் நம்ப முடியவில்லை. முனிவர் தானே, பயண அனுபவம் போதாதால் இப்படி மிகைப்படுத்தி கூறுகிறார் என்று அவர் சொன்னதை என்னால் ஒதுக்கவும் முடியவில்லை.”
அவர் காஞ்சி மன்னன் மகேந்திர வர்மனுக்கு மிகவும் நெருக்கமானவர் . மன்னனுக்கு உதவியாக பல்வேறு அரச காரியங்களில் ஈடுபடுபவர். வடக்கே விஜயநகரம் முதல் தெற்கே குமரி வரை அத்தனை இடமும் சுற்றி வந்தவர்.முனிவர்கள் போகக்கூடாத போர்க்களங்களுக்கு கூட , போன அனுபவம் உள்ளவர். விஜயநகர மன்னன் "நரசிம்ம ராய"ரின் மனத்தைக் கவர்ந்ததால், நகரின் வெளியே தனக்கென ஆசிரமம் அமைக்க அனுமதி பெற்றவர்."
எனவேதான் பயணப்பிரியனாக இருந்துகொண்டு மதுரையை பார்க்காமல் இருப்பது பெரும் பாதகம் என்று முடிவு செய்து மறுநாளே பயணம் கிளம்பிவிட்டேன்.காஞ்சியில் இருந்து மதுரையின் தொலைவு தெரிந்துருந்தும் நடைப்பயணம் போக முடிவு செய்தது முட்டாள்தனமோ என இப்போது எண்ண வைத்தது கால்களில் ஏற்பட்ட கடுமையான வலி.

"மதுரையை அடைந்ததும் முதலில் ஒரு நல்ல பயணியர் விடுதியை கண்டுபிடித்து நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்" என்று மனதில் எண்ணிக்கொண்டே நடக்கத் தொடங்கினேன்.
இன்றைக்கு காலையில் வில்லியனூரில் உணவருந்திவிட்டு கிளம்பும்போது சக பயணி ஒருவன் இன்னும் நான்கு நாழிகையில் மதுரையை அடைந்துவிடலாம் என சொன்னது நினைவில் இருக்கிறது .அவன் சொன்ன கூற்று உண்மை ஆயின் இன்னும் ஒரு நாழிகையில் மதுரையை அடைந்துவிடலாம் என்பதை நினைக்கும் போதே மனதுக்குள் மகிழ்ச்சி கூடாரம் போட ஆரம்பித்துவிட்டது"மிக அகலமான சாலையும்,சாலையின் இருபுறமும் இருந்த புங்கை மரங்களின் அழகும்,நூறுக்கும் மேலான ஆண்டுகள் வளர்ந்து விட்டதை பறைசாற்றும் விதமாக மிக அதிகமாகப் பருத்திருந்த பிரமிக்க வைக்கும் வாகை மரங்களும், பச்சை ஆடை உடுத்தி படுத்திருந்த நீண்ட நெடிய வயல்களும், மதுரை அருகே வந்துவிட்டதை உறுதிப்படுத்தின. “
ஏற்கனவே பொழுது சாய்ந்துவிட்ட நிலையும் சாலையில் இருந்த பெரும் மக்கள் கூட்டமும், கூட்டத்தில் இருந்த கணிசமானதமிழ் பெண்களின் எண்ணிக்கையும் , பாண்டிய நாடு களவு , கொள்ளை என்ற எந்த
பயமும் இல்லாமல் மன்னன "பராந்தக பாண்டியனின்”" ஆட்சியில் சொர்க்கபுரியாக இருப்பதை எடுத்துச் சொல்லியது.

காலையில் இருந்து யாரிடமும் ஏதும் பேசாததாலும், மதுரை அருகே வந்துவிட்டதன் அறிகுறிகள் என்னுள் ஏற்படுத்திய உற்சாகமும் ஒன்றாகச் சேர அதற்கு மேல் அமைதியாக இருக்க மனம் இல்லாமல், பக்கத்தில் வந்துகொண்டிருந்த ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளம் வாலிபன் ஒருவரினிடம் மெல்ல பேச்சு குடுக்க தொடங்கினேன்.

அன்பரே, என் பெயர் தமிழ்நேசன், காஞ்சியிலிருந்து வருகிறேன், நான் மதுரைக்கு முற்றிலும் புதிது , இன்னும் மதுரையை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்று தங்களால் கூறமுடியுமா? “ என்று என்
அறிமுகத்தோடு கேள்வியையும் சுருக்கமாக கேட்டு முடித்தேன்.

மதுரை இங்கிருந்து, இங்கிருந்து இரண்டு காத தூரம், ஒன்றரை நாழிகையில் மதுரையை அடைந்துவிடலாம் ஐயா " என்று தன் கம்பீரமான குரலில் சொல்லி முடித்தான்.

அந்த இளைஞன் கட்டிய பணிவும் , அவன் குரலில் நேர்த்தியும் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இன்னும் ஒரு நாழிகை நடையில் மதுரையை அடைந்துவிடலாம் ,தமிழகத்தின் முதல் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட நகரை தரிசித்து விடலாம் என்று நினைத்துக்கொண்டே எண்ணங்களை பின்னோக்கி செலுத்தினேன்.
நினைவு முழுதிலும், நேற்று வில்லியனூரில் , நான் பார்த்த
அழகு தேவதையின் நினைவும், அவள் அழகுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் கள்வர்களிடம் அவள் காட்டிய அனாசயமான வீரமும் தான் நிரம்பி இருந்தது.”


அவ்வளவு இலாவகமாக ஒரு பெண் வாள் வீசுவதை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை.”பெண்ணைப் பூவென எழுதுவோர் , யாரேனும் அவளைப் பார்த்திருந்தால் மின்னல் என்றல்லவா எழுதியிருப்பார்கள்" .நினைவுகளில் கரைந்துபோன நேரம் கையில் இருந்த கனம் சற்று குறைந்தது போல இருந்தது. மாருதி ஒன்று கையில் இருந்த இரவு உணவை பறித்துச் சென்றது சற்று தாமதமாக தான் புரிய வந்தது.
இன்று இரவு பட்டினி தான்" என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன்....

சற்று தூரத்திலிருந்து வேகமாக ஓடி வரும் குதிரைகளின் காலடிக்குலம்புகளின் சத்தம் மெதுவாக கேட்க்கத்தொடங்கியது. இரண்டு மூன்று மணித்துளிகளில் , காலடிச் சத்தம் பலமாக கேட்கத்தொடங்கியது.
குழப்பமான காலடி சத்தத்திலிருந்து மூன்று முதல் நான்கு குதிரைகளில்
ஐந்து அல்லது ஆறு பேர் வரலாம் என்று மனசுக்குள் கணக்கு போட்டு முடிக்கும் முன்னரே நான்கு குதிரைகள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு எங்களைக் கடந்து சென்றன.....
                                                 
                                                                                                                         ( தொடரும் )

7 comments:

innoru kalki ya vanthuruva pola....

antha aalu pandiyarkalayum madhurayayum patthi chirappa ezhuthave illa... :(

athe nee pannu....
 
kathai nalla iruku da ana mahendra varman aatchi seiyumbothu maduraiya aanda mannan pera enga padicha?

madurai pallavarkal kaalathuleye develpe ayiducha?
 
The way of telling story was good da.

mahendra varman aatchi kaalathula iruntha paandiya mannanoda pera enga padicha?

pallavarkal kaalathuleye madurai sorgapuri nagaramaga irunthucha?
 
This is definitely a commendable attempt.The description is vivid and imaginative.But I see that it looks more alike kalki's novels and hence tend to confuse if it is a continuation or sub part of his novels..but i guess it is too early to comment about its similarity...hope to read more interesting sections

Preethi
 
madurai pallavarkal varathuku 500-700 aandukalku munnadiye irunthuthu :)

pallavarkal than puthusu....
madhurayum pandiyarkalum pazhasu....

btw, Mahendravarman I kalathula aatchi senja pandiya mannan "Maravarman Avani Chulamani"
 
நண்பர் சுந்தருக்கு...
முதலில் தங்கள் விமர்சனங்களுக்கு நன்றி.
இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையானது. கதையை வரலாற்று கதையாக சொல்லவேண்டும் என்று ஆசை .அதன் காரணமாக தான் பெயர்களை மட்டும் வரலாற்றிலிருந்து , நாட்டை ஆண்ட மன்னர்களின் பெயர்களை எடுத்துக்கொண்டேன்.
அவ்வாறு பயன்படுத்துவது தவறு என்று தங்களுக்கு தோன்றினால் , மன்னிக்கவும் .
இது முழுக்க முழுக்க கற்பனையான கதை .

பிறகு எனக்கு தெரிந்த பல்லவ பாண்டி மன்னர்களின் பெயர்களும் காலமும் பின்வருமாறு

பாண்டியர்கள்
முடத்திருமாறன் --கி.பி. 50-60

மதிவாணன் --கி.பி. 60-85
பெரும்பெயர் வழுதி --கி.பி. 90-120
பொற்கைப் பாண்டியன் --கி.பி. 100-120
இளம் பெருவழுதி --கி.பி. 120-130
அறிவுடை நம்பி -- கி.பி. 130-145
பூதப் பாண்டியன் --கி.பி. 145-160
நெடுஞ்செழியன் --கி.பி. 160-200
வெற்றிவேற் செழியன் --கி.பி.200-205
தலையாலங்கானத்துச் செருவென்ற
பாண்டியன் நெடுஞ்செழியன் --கி.பி. 205-215
உக்கிரப் பெருவழுதி --கி.பி. 216-230
மாறன் வழுதி -- கி.பி. 120-125
நல்வழுதி --கி.பி. 125-130
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி --கி.பி. 130-140
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் --கி.பி. 140-150
குறுவழுதி கி.பி.150-160
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி --கி.பி. 160-170
நம்பி நெடுஞ்செழியன் --கி.பி. 170-180

இடைக்காலப் பாண்டியர்கள் :

கடுங்கோன் --கி.பி. 575-600

அவனி சூளாமணி --கி.பி. 600-625
செழியன் சேந்தன் --கி.பி. 625-640
அரிகேசரி --கி.பி. 640-670
ரணதீரன் --கி.பி. 670-710
பராங்குசன் --கி.பி. 710-765
பராந்தகன் --கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் --கி.பி. 790-792
வரகுணன் --கி.பி. 792-835
சீவல்லபன் --கி.பி. 835-862
வரகுண வர்மன் - -கி.பி. 862-880
பராந்தகப் பாண்டியன் --கி.பி. 880-900

பிற்காலப் பாண்டியர்கள் :

மூன்றாம் இராசசிம்மன் --கி.பி. 900-945

வீரபாண்டியன் --கி.பி. 946-966
அமர புயங்கன் --கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் --கி.பி. 945-955
வீரகேசரி --கி.பி. 1065-1070
சடையவர்மன் சீவல்லபன் --கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் --கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் --கி.பி.1150-1162
மாறவர்மன் சீவல்லபன் --கி.பி. 1132-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் --கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் --கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் --கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் --கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் --கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் --கி.பி. 1238-1250
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் --கி.பி. 1239-1251
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் --கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் --கி.பி. 1251-1281
சடையவர்மன் விக்கிரமன் --கி.பி. 1149-1158
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன --கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் --கி.பி. 1268-1281
சடையவர்மன் சுந்தரபாண்டியன் --கி.பி. 1276-1293
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் --கி.பி. 1422-1463
இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் --கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் --கி.பி. 1473-1506
குலசேகர தேவன் --கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் --கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் --கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் --கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் --கி.பி. 1564-1604
வரதுங்கப் பாண்டியன் --கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் --கி.பி. 1613-1618

பல்லவர்கள்..

1. முதலாம் மகேந்திரவர்மன் 600-630

2. முதலாம் நரசிம்மவர்மன் 630-668

3. இரண்டாம் மகேந்திரவர்மன் 668-670

4. பரமேஸ்வரவர்மன் 670-700

5. இரண்டாம் நரசிம்மவர்மன் 700-728
 
nanum athaye cholla virumbinen.... :)
muzhu thahavalkaluku nandri...

intha thakaval lam engendu kidachuthu?