தீப ஒளிவிழா நல்வாழ்த்துக்கள் ....

தீப ஒளி விழா -நம்
வாழ்வின் திரு விழா !
கொண்டாடி மகிழ்வோம்.


இறந்த காலம் பற்றிய
எந்த கவலையும் இன்றி
எதிர் காலம் பற்றிய
எந்த பயமும் இன்றி
நம் வாழ்வின்
நிகழ்கால நிமிசங்களே
உண்மையென
ரசித்து ருசித்து
கொண்டாடி மகிழ்வோம் !

நமக்குள்  ஒளியை
ஏற்றி வைத்த ,
ஏற்றி வைக்கின்ற ,
ஏற்றி வைக்க போகிற ,
யாவரையும் நினைவு கூர்ந்து ,,,,
பட்டாசு ,பலகாரங்களோடு,
பகிர்ந்து கொள்வோம்
பாசத்தையும்,நேசத்தையும் சேர்த்து .
என்ன வந்தால் என்ன !
என்ன போனால் என்ன!
நிரந்தம் என்று
ஏதும் இல்லை இங்கு.
இருப்பதை வைத்து கொண்டு
இன்பமாய் வாழ்தலே நன்று.
என .
வன்முறைகளை
தீஇட்டு கொளுத்திவிட்டு ,
அமைதி வழியில்
மற்றவர்களையும் மகிழ்வித்து,
நாமும் மகிழ்வோம்!
என்றும் வாழ்வில் ஒளிர்வோம்!!
அறிவுஒளியே இந்த உலகம் முழுக்க வீசட்டும் !
அமைதியையும் ,அன்பையும் மட்டுமே ,
இனிமேல் இந்த பூமி பார்க்கட்டும் !!
தீப ஒளிவிழா நல்வாழ்த்துக்கள் ....


                                         - விஜய்விக்னேஷ்